News November 14, 2025
ஊழல் வழக்கில் அம்பானி: மும்பை HC நோட்டீஸ்

இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில், ₹12,000 கோடி மதிப்புள்ள ONGC எரிவாயுவை சட்டவிரோதமாக அம்பானி திருடியதாக கூறி, கிரிமினல் வழக்குப்பதியவும், சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை HC, சிபிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நவ.18-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Similar News
News March 22, 2026
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்

திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட உதவி வேளாண் அலுவலர், அரசு பஸ் கண்டக்டர் விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பான போட்டோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசு பணியில் உள்ள இருவரும் கட்சி சார்பில் விருப்ப மனு அளித்தது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
News March 22, 2026
முட்டை விலை குறைந்தது

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. இன்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் கொள்முதல் விலை ₹4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்ணயாளர்களுக்கு கவலையையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. உங்க ஊரில் முட்டை விலை?