News November 14, 2025

இந்த தம்பியை பார்த்தால் தன்னம்பிக்கை தானா வரும்..

image

பனியில் உறைந்த தலைமுடி, புருவத்துடன், கன்னங்கள் சிவந்தபடி, ஆண்டு இறுதித்தேர்வுக்கு சிறுவன் ஒருவன் வகுப்பறைக்குள் வந்துள்ளான். என்ன இது? என ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்க, -9° செல்சியஸில் 5 கிமீ., நடந்தே பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. எவ்வளவு தடைகள் வந்தாலும், தனது இலக்கை அடைய வழிவகுக்கும் கல்விக்காக சீனாவைச் சேர்ந்த இச்சிறுவனின் பயணம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. படிப்பு முக்கியம் சிதம்பரம்!

Similar News

News March 12, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. கலெக்டர்களுடன் மீட்டிங்

image

சிலிண்டர் தட்டுபாடு எதிரொலியாக இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News March 12, 2026

எம்ஜிஆரை இழிப்படுத்திய நடிகர்.. விஷால் கண்டனம்!

image

* <<19348306>>எம்ஜிஆரை <<>>அவதூறாக பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார் * ரவி மோகனின் ‘Bro code’ படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளது *ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் இதுவரை 57.9 கோடி வசூலித்துள்ளதாம் *‘மெளனம் பேசியதே’ படத்திற்கு பிறகு அமீரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது.

News March 12, 2026

தமிழக கவர்னராக R.V.அர்லேக்கர் பதவியேற்றார்

image

தமிழகத்தின் புதிய பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை HC-ன் தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரளாவின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!