News April 20, 2024
எலான் மஸ்க் பயணம் ரத்துக்கு பாஜக காரணமா?

எலான் மஸ்க்கின் பயணம் தொடர்பாக சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி பாஜகவை விமர்சித்துள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவில் பிரதமர் மோடியை, எலான் மஸ்க் சந்திப்பதாக இருந்த நிலையில், அந்த பயணத்தை அவர் தற்போது ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா, “தன்னுடைய பயணத்தின் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கும் என்பதால் எலான் பயணத்தை ஒத்திவைத்திருப்பாரோ”? என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
Similar News
News August 18, 2025
BREAKING: திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என திமுகவிற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அரசியலாக பார்க்கக்கூடாது. கட்சி பேதமின்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
மனசாட்சி உள்ள மக்களாட்சியை நோக்கி.. விஜய்

1967, 1977 வெற்றி விளைவுகளை 2026 தேர்தலிலும் காணப்போவதாக விஜய் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவெக 2-வது மாநில மாநாடு தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிப்போம் என சூளுரைத்துள்ளார். இந்த மாபெரும் அரசியல் விளைவை நிகழ்த்தி காட்டும் பேரறிவிப்பாக மாநாடு அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: வேல்முருகன்

திமுக கூட்டணி தலைவர்கள் யாரும் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தான் சட்டப்பேரவையில் கோபமாக பேசினாலும், திமுக அமைச்சர்கள் அதற்குரிய பதிலை அளித்தனர் என்றார்.