News November 14, 2025
பிஹாரில் சைலண்ட்டாக ஸ்கோர் செய்யும் கட்சி

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும் 29 தொகுதிகளில் 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சீட் பங்கீட்டிங் போது இந்த கட்சிக்கு 29 தொகுதிகளை ஒதுக்கவே பாஜக தயங்கியது. ஏனென்றால் 2020 தேர்தலில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி 130 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே ஜெயித்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் 75% வாக்குகளை கவர் செய்து LJP ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 14, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,280 குறைந்திருக்கிறது. காலையில் சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில், மதியம் மேலும் ₹800 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,740-க்கும், சவரன் ₹93,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ₹2,400 அதிகரித்த நிலையில், இன்று ₹1,280 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
பிஹார் வெற்றியை கொண்டாட வேண்டாம்: பாஜக

பிஹாரில் NDA கூட்டணி முன்னிலையில் உள்ளதால் பாஜகவினர் கொண்டாட தயாராகி வருகின்றனா். இந்நிலையில், டெல்லி வெடிகுண்டு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருப்பதை கருத்தில் கொண்டு வெற்றியை கொண்டாட வேண்டாம் என பாஜக அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை தலைநகர் பாட்னாவில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என EC அறிவுறுத்தியிருந்தது.
News November 14, 2025
நகை கடன்… முக்கிய அறிவிப்பு

வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. கடனை திருப்பி செலுத்தவில்லை எனில் நகைகளை வங்கிகள் ஏலம் விடலாம். ஆனால், ஏல விவரங்களை தாய் மொழியில் உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஏலம் நடந்தால், உபரித் தொகை 7 நாள்களுக்குள் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கடனை முறையாக செலுத்திவிட்டால், நகைகளை 7 நாள்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். SHARE IT


