News November 14, 2025
தேர்தல் முடிவு.. அரசியலில் இருந்து விலகலா?

நிதிஷ்குமாரின் JD(U) கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றால், தான் அரசியலில் இருந்து விலகிவிடுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விட்டிருந்தார். தற்போதைய நிலவரப்படி JD(U) 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, பிரசாந்த் கிஷோர் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று JD(U) கட்சியினர் கூறி வருகின்றனர். அதேநேரம், அவரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 16, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 16, பங்குனி 2 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை:1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News March 16, 2026
வடிவேலு ஆதரவு திமுகவுக்கு அழிவுதான்: செல்லூர் ராஜு

தேர்தல் நெருங்கிய நிலையில் திமுகவின் மேடைகளில் நகைச்சுவை கலந்து நையாண்டியுடன் வடிவேலு அனல் பறக்க உரையாற்றி வருகிறார். இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பேசினால் அந்த கட்சி அழிந்து போகும் என்றும், அதற்கு 2011-ம் ஆண்டு தேர்தல்தான் சாட்சி எனவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். வடிவேலு பிரசாரத்தில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்றும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
உடல் எடை குறைப்புக்கு உதவும் 6- 6- 6 வாக்கிங் நடைபயிற்சி!

வாக்கிங் செல்வது உடலுக்கு பல வகையில் நல்லது என தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. உடல் எடை குறைப்புக்கு இந்த 6- 6- 6 வாக்கிங் முறைதான் மிகவும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது காலை 6 மணி அல்லது மாலை 6 மணியில் இருந்து தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்ய வேண்டும். இதில், முதல் 6 நிமிடங்கள் Warm- Up செய்யவும் கடைசி 6 நிமிடங்கள் Cool down செய்யவும் ஒதுக்க வேண்டும்.


