News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

RJD தலைவரும், MGB கூட்டணியின் CM வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 3-வது சுற்று முடிவில் தேஜஸ்வி 10,957 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம், பாஜகவின் சதிஷ்குமார் யாதவ் 12,230 வாக்குகள் பெற்றுள்ளார். 30 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Similar News
News November 14, 2025
11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்.. வருகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நவ.21-ல் புயல் சின்னம் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், நவ.16-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நவ.17-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
News November 14, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 வரை சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✱காலியிடங்கள் 161 ✱கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✱வயது: 18- 33 வரை ✱தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ✱சம்பளம்: ₹35,400 ✱முழு தகவலுக்கு <
News November 14, 2025
வேலைக்கு செல்வோருக்கு ₹15,000 கொடுக்கும் அரசு

முதல் முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ELI திட்டத்தின் மூலம் ₹15,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 6 மாதம் வேலை செய்த பிறகு முதல் தவணையும், ஒரு வருடத்திற்கு பிறகு, 2-வது தவணையும் வழங்கப்படும். இதனை பெற மாத சம்பளம் ₹1 லட்சத்திற்கு மிகாமலும், EPFO கணக்கும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை EPFO உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கப்படும். SHARE.


