News November 14, 2025
FAKE APP-களை கண்டறிவது எப்படி?

போலி ஆப்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் உள்ளன. ➤செயலியின் டெவலப்பர் பெயர்/லோகோவை பார்க்கவும். போலி செயலியாக இருந்தால் எழுத்துப்பிழை இருக்கும் ➤எத்தனை பேர் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர் என்பதை கவனியுங்கள் ➤ரிவ்யூக்களை வாசியுங்கள் ➤APK செயலிகளை பதிவிறக்க வேண்டாம் ➤தேவையற்ற பர்மிஷன்கள் கேட்டால் கவனமாக இருக்கவும். SHARE.
Similar News
News November 14, 2025
தருமபுரி: ரயில் சேவையில் மாற்றம்!

தருமபுரி மார்க்கத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் நவ.16ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் தருமபுரி வழியாக செல்லாமல், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-காரைக்கால் (16529) ரயில், பையனப்பள்ளி வழியாக சேலம் செல்லும். பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: அரசு முக்கிய அறிவிப்பு

சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிவுரையின் படி, FASTag இல்லாத வாகனங்களுக்கான டோல் கட்டணம் இன்று நள்ளிரவு (நவ.15) முதல் மாற்றப்படுகிறது *FASTag இல்லாமல் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாகனங்கள், FASTag உள்ள வாகனங்களை விட 2 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் *FASTag இல்லாத வாகனங்கள், UPI மூலம் பணம் செலுத்தினால், கட்டணம் 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். SHARE IT.
News November 14, 2025
BREAKING: தெ.ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 7 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் மார்க்ரம், ரிக்கெல்டன் ஆகியோர் பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நடுவரிசை வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த குல்தீப் யாதவ், முல்டர் மற்றும் கேப்டன் பவுமாவை ஆட்டம் இழக்க செய்தார். தற்போது 147-7 என்ற நிலையில் தெ.ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.


