News November 14, 2025
வால்பாறை மாணவி மாநில போட்டிக்கு தேர்வு!

வால்பாறை ஒன்றியத்தில் நடந்த கலைத்திருவிழாவில், 68 பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில், வால்பாறை அரசு உதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தர்ஷிகா, வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 18, 2026
கோவை: தேர்தலை வைத்து மோசடிக்கு வாய்ப்பு! CHECK NOW

கோவை மக்களே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் தங்களை தேர்தல் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. சோதனை செய்பவர்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.
News March 18, 2026
கோவை: இனி Whats App மூலம் ஆதார் கார்டு.!

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 18, 2026
கோவையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய அண்டாக்கள் பறிமுதல்!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழைய குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 90-க்கும் மேற்பட்ட அண்டாக்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இவை தற்போது மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.


