News November 14, 2025

நெல்லை: தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

தேவர்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நேற்று தேவர் குளத்தில் இருந்து ராமையன்பட்டிக்கு பைக்கில் மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சென்றார். அப்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மானூர் போலீசார் அவரது உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 15, 2026

நெல்லையில் நாளை முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

நெல்லை: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

image

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 15, 2026

FLASH: நெல்லை பஸ் நிலைய கொலையாளியின் வாக்குமூலம்!

image

பாலாமடை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சுதாகர்(29). இவர் தனது மனைவி பேச்சியம்மாளை(26) இன்று நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில், வெட்டி படுகொலை செய்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தகாத உறவு காரணமாக கொலை நடந்தததாக தகவல். இதுகுறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது மற்றும் 2 வருடமாக கருத்து வேறுபாட்டால் பிரச்னை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!