News November 14, 2025
100 இடங்களை தாண்டியது NDA

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி BJP 56, JDU 44, LJP (RV) 3 என மொத்தம் 103 இடங்களில் NDA முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், 60 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது 55 இடங்களாக குறைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. RJD 38, CONG 12, CPI (ML) 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
Similar News
News March 19, 2026
HDFC சேர்மன் பதவி விலகினார்.. மிகப்பெரிய இழப்பு!

HDFC வங்கியின் பகுதிநேர சேர்மன் அசோக் சக்ரவர்த்தியின் ராஜினாமா பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நிஃப்டி50’-ல் முன்னணி வகிக்கும் HDFC-யின் பங்குகள் 5% சரிவை சந்தித்ததுடன், நிஃப்டியும் 2.5% சரிந்துள்ளது. நிறுவனத்தின் அண்மை செயல்பாடுகள், தனது தனிப்பட்ட விழுமியங்கள் & அறநெறிகளுடன் ஒத்துப்போகாததால் விலகியதாக அவர் கூறியுள்ளது, முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பாதித்துள்ளதே சரிவுக்கு காரணம்.
News March 19, 2026
+2 மாணவி வன்கொடுமை: இளைஞர் அதிரடி கைது

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News March 19, 2026
‘ஆதவ் அர்ஜுனாவை உடனே நீக்குக’

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் ஆதவ் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சாடியுள்ளார். விஷக்கிருமி போன்ற ஆதவ் அர்ஜுனா எந்த கட்சிக்கு சென்றாலும், அக்கட்சியின் தலைவரை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை அடைய நினைப்பார். எனவே, ஆதவ் அர்ஜுனா போன்ற புற்றுநோய் செல்களை உடனே நீக்க வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளார்.


