News November 14, 2025
குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பேன்: CM ஸ்டாலின்

தாயன்பு காட்டி குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிடமாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன் எனவும் அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பரந்த பார்வையும் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 16, 2026
அஜித்தின் அடுத்த படம் இப்போதைக்கு இல்லை!

அஜித் – ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது கார் ரேஸிங் அணி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டு ஜனவரி வரை அஜித்துக்கு ரேஸ் இருக்கிறது. இதனால் இப்போதைக்கு அவர் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 2028-ல் ஆவது அவரது படம் வருமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
News March 16, 2026
கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்மொழிகள்

*நினைத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்களுக்கு, உலகமே வழிவிடும். * வெறுப்பினால் எதையும் சாதிக்க முடியாது. அன்பினால் எதையும் வெல்ல முடியும். *காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இன்று உயர்ந்தவர்கள் நாளை வீழ்வார்கள், இன்று வீழ்ந்தவர்கள் நாளை உயர்வார்கள். *நேரடியாகத் தாக்கும் பகையை விட, புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வஞ்சகம் மிகவும் ஆபத்தானது.
News March 16, 2026
இனி சிலிண்டருக்கும் பூட்டு போடனும்!

தங்கத்தை பாதுகாப்பது போல் கேஸ் சிலிண்டரை பாதுகாக்கும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. ஆமாங்க, மத்திய பிரதேசத்தில் வீட்டில் இருந்த பெண்ணை தாக்கிவிட்டு கேஸ் சிலிண்டரை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிலிண்டரை ஜெயின் போட்டு பூட்டி வைத்துள்ளனர். உங்க வீட்டு சிலிண்டர் பத்திரமா இருக்கா?


