News November 14, 2025

சென்னை: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 14, 2026

சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு

image

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மார்ச் 14, 2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நகரம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், புதிய இணைப்பு, வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

ஆலந்தூரில் 1000 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம்

image

சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதியில் உள்ள 1000 மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தையல் இயந்திரங்களை நேற்று வழங்கினார். பெண்கள் சுயதொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த இயந்திரம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் மகளிர் அணி உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

News March 14, 2026

சென்னையில் கத்தியால் குத்தி கொடூர கொலை; வந்தது தீர்ப்பு!

image

திருவான்மியூரில் அக்கா கணவரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளியான தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏழுமலை என்ற நபர் குடித்துவிட்டு தினமும் மனைவி சித்ராவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டி கேட்ட மனைவியின் தம்பியுடன் ஏற்பட்ட தகராறில், அவர் ஏழுமலையை கத்தியால் குத்தினார்.

error: Content is protected !!