News November 14, 2025

திருவாரூர் மாவட்டத்தில் TET தேர்வு எழுதும் 8213 பேர்

image

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 15, 16 தேதிகளில் TET தேர்வை மொத்தம் 8213 பேர் எழுதவுள்ளனர். நவம்பர் 15 அன்று நடைபெறும் TET-I தேர்வை 8 மையங்களில் 1843 தேர்வர்களும் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ள TET-II தேர்வினை 19 மையங்களில் 6370 பேரும் எழுதவுள்ளனர். தேர்வு மையத்தில் தடையில்லா மின்வசதி, குடிநீர் வசதி, அரசு போக்குவரத்து வசதி ஆகியவை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News March 28, 2026

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் விடுமுறை அறிவிப்பு

image

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எல்.எப் 2 மற்றும் எல்.எப் 3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News March 28, 2026

திருவாரூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 28, 2026

திருவாரூர்: அதிமுகவில் இணைந்த மு.ஊராட்சி மன்ற தலைவர்

image

திருவாரூர் மாவட்டம், ஒன்றியம் மேலவையில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பால சுப்ரமணியன், நேற்று திமுகவில் இருந்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கான இணைப்பு விழா அதிமுக மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய மற்றும் வலங்கை மண் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!