News November 14, 2025
தவெக உடன் கூட்டணியா? குழு அமைத்த காங்கிரஸ்

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அடங்கிய குழு, இன்னும் 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
இன்று உலக நீரிழிவு நோய் தினம்!

வீட்டுக்கு வீடு பைக் இருப்பது போல், தவறாமல் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். மக்களுக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நவ.14ம் தேதி ‘உலக நீரிழிவு நோய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயை தடுக்க, நல்ல உணவுப் பழக்கம், உடற்பயிற்சி & ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைப்பிடிப்பது அவசியம்.
News November 14, 2025
BREAKING: பாஜக முன்னிலை தொகுதி குறைந்தது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சற்றுநேரத்திற்கு முன்பு வரை 87 தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக, தற்போது 15 இடங்கள் குறைந்து 72 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், பாஜகவை விட குறைவான தொகுதிகளில் முன்னிலையில் இருந்த அதன் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் JDU, தற்போது 74 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
வாய்விட்ட டிரம்ப்; சமாளிக்கும் USA அரசு

USA-வில் திறமையானவர்கள் இல்லை என <<18265884>>டிரம்ப்<<>> கூறியிருந்தார். இதற்கு அமெரிக்கர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திறமை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை USA-வுக்கு கொண்டு வந்து, 3-7 ஆண்டுகள் வரை அவர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு பயிற்சியளித்து, பின்னர் அவர்களை தாயகம் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே டிரம்ப்பின் திட்டம் என கூறி, அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் விளக்கமளித்துள்ளார்.


