News November 14, 2025

ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற ஆணையம்

image

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆணவக்கொலைகளை தடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தலைவராகக் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி V.பழனிக்குமார், S.ராமநாதன் (IPS) ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 3 மாதங்களில் பரிந்துரைகளை வழங்கும்.

Similar News

News November 14, 2025

விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

image

விமானப்படையில் Flying and Ground Duty பதவிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுப்ட பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்கும் தேதி: நவ.17-டிச.14 வரை. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE IT.

News November 14, 2025

162 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

image

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA – 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. MGB – 76, ஜன் சுராஜ் – 3, மற்றவை – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2025

CM நிதிஷ்குமாரின் வருங்காலம் கேள்விக்குறி?

image

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜே.டி.யு கட்சியை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காலை 9.30 மணி நிலவரப்படி, பாஜக 71 தொகுதியிலும், ஜே.டி.யு 58 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஏற்கனவே NDA கூட்டணியின் CM வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படாத நிலையில், ஜே.டி.யு நிதிஷ்குமார் இம்முறை CM வேட்பாளர் ஆவது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

error: Content is protected !!