News November 14, 2025
தருமபுரி: லாரி கவிழ்ந்து விபத்து!

தருமபுரி, பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி பாப்பாரப்பட்டி அருகே நேற்று (நவ.13) காலை மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், முத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
தருமபுரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

தருமபுரி மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 4, 2026
பாப்பிரெட்டிப்பட்டி: 7 புதிய வீடுகள் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதிதாக 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
News March 4, 2026
தருமபுரி: ஆற்றில் குளித்தவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல்: திருக்கோவிலுார் அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 24. ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஞாயிறு அன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு தடை செய்யப்பட்ட கோத்திக்கல் பரிசல் துறை அருகே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கினார். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.


