News November 14, 2025
MP, MLA-க்கள் வழக்குகளில் சாட்டையை சுழற்றும் கோர்ட்

MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அது தீவிரமாக கருதப்படும். மேலும், ஐகோர்ட் தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
இலவச கேஸ்.. மக்களை ஈர்க்க PNG நிறுவனங்களின் ஆஃபர்

LPG சிலிண்டருக்கான தட்டுப்பாட்டு அதிகரித்து வருவதால் PNG இணைப்புகளுக்கு மக்களை ஈர்க்க எரிவாயு விநியோக நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. பதிவுக் கட்டண விலக்கு முதல் ₹500-க்கான இலவச எரிவாயு வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 31-ம் தேதிக்குள் புது இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என GAIL மற்றும் Indraprastha Gas நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
News March 16, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக பலரும் கச்சா எண்ணெயில் முதலீடு செய்து வருவதால் <<19395246>>தங்கம் விலை சரிவை<<>> சந்தித்து வருகிறது. இந்நிலையில், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தங்கம் விலை 30% (சவரனுக்கு ₹35,000 வரை) சரியும் என தெரிவித்துள்ளார். SHARE IT
News March 16, 2026
தவெகவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மன வலிமை இல்லை என்று பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறினர். தவறும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்களும் தவெகவிற்கு எதிராக பூத் அளவில் போர்க்கொடி தூக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


