News November 14, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

நாதக சார்பில் வரும் 21-ம் தேதி திருநெல்வேலியில் கடலம்மா மாநாடு நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், மீனவர்கள் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. முன்னதாக, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை பேசும் பொருட்டு நாதக சார்பில் ஆடு – மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
பிஹார் தேர்தல்.. பாஜக முன்னிலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் நிகழ்கிறது. ஜேடியூ – பாஜக கூட்டணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி, BJP -39, JDY -30, LJP(RV) 3 என மொத்தம் 72 இடங்களில் NDA கூட்டணியும், RJD – 33, cong – 8, CPI (ML) 3 என MGB கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
வடசென்னைக்கு பிறகு என் நிலை இதுதான்: ஆண்ட்ரியா

‘வடசென்னை’ பட சந்திரா கேரக்டருக்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் தனக்கு வரவில்லை என்று ஆண்ட்ரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஏனென்றால், தன்னை வைத்து என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை என்ற அவர், உண்மையில் பல நடிகர்கள், தங்கள் படங்களில் பவர்ஃபுல் பெண் கேரக்டர்களை விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார். ஆண்ட்ரியாவின் கேரக்டர்களில் உங்களை கவர்ந்தது எது?
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவு.. ஆரம்பத்திலேயே திடீர் திருப்பம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜேடியூ – பாஜக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ஆர்ஜேடி – காங்., கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. ஜேடியூ – பாஜக கூட்டணி 38, ஆர்ஜேடி – காங்., 42, ஜன் சுராஜ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிலவரம் எந்த நேரத்திலும் மாறலாம்.


