News November 14, 2025
நவம்பர் 14: வரலாற்றில் இன்று

*உலக நீரிழிவு நாள். * தேசிய குழந்தைகள் தினம். *1889 – ஜவகர்லால் நேரு பிறந்தநாள். *1965 – அமெரிக்கா – வியட்நாம் இடையே போர் தொடங்கியது. 1971 – மரைனர் 9 விண்கலம் செவ்வாய் கோளை சென்றடைந்தது. 1957 – நடிகர் ஆர்.பார்த்திபன் பிறந்தநாள். 1984 – நடிகை மம்தா மோகன்தாஸ் பிறந்தநாள். *1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
Similar News
News November 14, 2025
காலை வெறும் வயிற்றில் இத குடிங்க..

காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், செரிமான மேம்பாடு, முடி வளர்ச்சி, உடல் எடையை குறைக்க, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. இந்த சாறில் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டாம். அனைவருக்கும் பயனளிக்கட்டுமே, SHARE THIS.
News November 14, 2025
தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $20 குறைந்து $4,185-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நேற்று (நவ.13) மட்டும் சவரனுக்கு ₹2,400 அதிகரித்து, ₹95,200-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
நீங்க இந்த சவாலுக்கு ரெடியா?

ஆபிஸ் டென்ஷன், டிராபிக் சத்தம், நகரங்களின் கூச்சல்- இரைச்சல் இன்றி, நம் மனதை வருடும் ஒரு பயணமாகவும் டிரெக்கிங் அமைகிறது. உங்களுக்கும் டிரெக்கிங் போகணும் என ஆசை இருந்தால் அதற்கு தமிழகத்திலேயே சில சிறந்த பெஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. அவை எந்தெந்த இடம் என அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு டிரெக்கிங் போன அனுபவம் உள்ளதா?


