News November 14, 2025
யோசித்து கூட பார்க்காத வகையில் தண்டனை: அமித்ஷா

டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். இனி இது போன்ற சம்பவத்தை செய்ய வேண்டும் என யாரும் எண்ணாத வகையில், அந்த தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்து கொள்ளாது என்பதை உலகிற்கு உணர்த்தும் செய்தியாக அது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 21, 2026
பள்ளிகளுக்கு 8 நாள்கள் கூடுதல் விடுமுறை

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8 நாள்கள் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முன்கூட்டியே தேர்வு முடிவடைவதால், ஏப் 17-ம் தேதியே கோடை விடுமுறை தொடங்குவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 21, 2026
LJK இணைந்ததால் கூட்டணிக்கு பலம்: ரங்கசாமி

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் LJK-வை NDA கூட்டணியில் இணைப்பதற்கு புதுச்சேரி CM ரங்கசாமி மறுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரே NDA கூட்டணியில் LJK இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். LJK இணைந்தால் கூட்டணிக்கு பலம் என்று மோடி, அமித்ஷா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, இக்கூட்டணியில் NR காங்., – 16, பாஜக – 10, அதிமுக, LJK கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
News March 21, 2026
₹18 கோடிக்கு ஏலம் போன ட்விட்டர் பதிவு!

மார்ச் 21, 2006. சாதாரணமாக ஜாக் என்பவர் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். ‘just setting up my twttr’ என அதிகாலை 2:20 மணிக்கு அவர் பதிவிட்டதுதான் உலகின் முதல் ட்விட்டர் பதிவாகும். இன்று X-ஆகியிருக்கும் ட்விட்டரின் Co-founder ஜாக். வரலாற்று சிறப்புமிக்க அவரின் இந்த பதிவு 2021-ம் ஆண்டு ₹18 கோடிக்கு ஏலம் போனது. அப்பணம் தொண்டு பணிக்காக அளிக்கப்பட்டது. நீங்க ட்விட்டரில் முதலில் என்ன பதிவிட்டீங்க?


