News November 14, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது என இதுப்போன்ற செயல்கள் இருந்தால் 181 என்ற இலவச எண்ணை அழைக்கவும். மேலும் பிரச்சனைகள்/ஆலோசனைகளுக்கு Child Helpline 1098 என்ற இலவச எண்ணை அழைக்கவும் என்றார்
Similar News
News March 13, 2026
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 45 வயது பெண், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரில் கும்மிடிப்பூண்டி மகளிர் போலீசார் ரஞ்சித், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர்
News March 13, 2026
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். *ஷேர் பண்ணுங்க*
News March 13, 2026
திருவள்ளூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

திருவள்ளூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27667070) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!


