News November 13, 2025
ஐபிஎல் 2026: வெறித்தனமாக பயிற்சி செய்யும் தோனி

2026 ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வகையில் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தினமும் 5 மணி நேரம் வலைப்பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுவே அவருக்கு One Last Dance-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனது முழு திறனையும் வெளிப்படுத்த தோனி தயாராகி வருகிறார். எத்தனை பேர் தோனியின் ஆட்டத்தை காண ஆவலாக இருக்கீங்க?
Similar News
News March 23, 2026
சேலம்: வீடு புகுந்து கொலை – தம்பதி கைது

பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த கோபால் என்பவர், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் (எ) அசோக் என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கோபாலின் மனைவி கண் முன்னேயே இந்த பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தப்பியோடிய அசோக்கைத் தேட போலீசார் தனிப்படை அமைத்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அசோக் மற்றும் அவரது மனைவி மயிலு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
News March 23, 2026
கூட்டணி அதிமுக தலைமையில் இல்லை: கனிமொழி

தொகுதி பங்கீடுக்காக அதிமுக டெல்லியில் காத்து கிடப்பதன் மூலம் பாஜக தலைமையில்தான் கூட்டணி செயல்படுவது தெளிவாகி உள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையில் தான் NDA கூட்டணி என்று தெரிவித்தாலும், கூட்டணி பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், NDA கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுக்காக EPS, TTV உள்ளிட்டோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்துள்ளனர்.
News March 23, 2026
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று லேசான மழை பதிவானது.


