News November 13, 2025
டெல்லி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது

<<18274461>>டெல்லி குண்டுவெடிப்பு <<>>சம்பவத்தில் லக்னோவை சேர்ந்த டாக்டர் பர்வேஸ் அன்ஸாரியை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. இவர் ஏற்கனெவே கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷகித்தின் தம்பி என்று தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை பர்வேஸ் அன்ஸாரி ஏற்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், லேப்டாப்-கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News November 14, 2025
ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. எப்போது தெரியுமா?

2026 IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிச.16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மினி ஏலம் என்பதால், ஒரே நாளில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தக்கவைத்த வீரர்களின் விவரம் இன்னும் 2 நாள்களில் வெளியான பிறகு, ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு தொகையுடன் கூடுதலாக ₹5 கோடி வரை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவு செய்யலாம்.
News November 14, 2025
வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தயார்.. சரத் பவாருக்கு கடிதம்

90s கிட்ஸ்களுக்கு திருமணம் நடப்பதே போராட்டமாக உள்ளது என்பதற்கு இச்சம்பவமும் உதாரணம். 34 வயதாகும் தனக்கு இனியும் திருமணம் நடக்கும் என்று தோன்றவில்லை, வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தயார் என, மஹாராஷ்டிரா இளைஞர் ஒருவர், சரத் பவாருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். தன்னைப் போல் விவசாயம் செய்துவரும் இளைஞர்களை திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டார் முன்வரவில்லை என்றும் அவர் வேதனைப்பட தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
உழைப்பால் கிடப்பதே வெற்றி.. அஜித்தை புகழ்ந்த சூரி

அஜித்துடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியாக தனது X தள பக்கத்தில் சூரி பகிர்ந்துள்ளார். அதில், ‘அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது என பதிவிட்டுள்ளார். சூரியின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் ஹார்ட்டினை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


