News November 13, 2025
கல்லூரி வளாகத்தில் SIR குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் ஆணையர் மற்றும் ஆட்சியர் கலைசெல்வி மோகன் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News March 18, 2026
அறிவித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 சட்டமன்ற தொகுதிக்கான எண்கள் மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தேசிய வாக்காளர் உதவி எண் 1950-க்கும் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பெறலாம்.
News March 18, 2026
காஞ்சியில் திக்குமுக்காடும் மக்கள்!

காஞ்சிபுரத்தில் நிறைவேறாத திட்டங்களால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சிறுகாவேரிப்பக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அமைக்க 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை கட்டப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். மேலும், புறநகர் பேருந்து நிலையம், கரியன்கேட் பகுதியில் உயர்மட்ட பாலம், பாலாற்றில் தடுப்பணை என பல கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
News March 18, 2026
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.17) இரவு முதல் இன்று காலை வரை நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.


