News November 13, 2025
ஒரு ரூபாய் கூட கட்சியில் பெற்றதில்லை: அண்ணாமலை

நான் சுயமாக வணிகம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நான் தொழில் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு SIR பொறுப்பாளராக உள்ள நான், அங்கு செல்வதற்கான செலவையும் நானே செய்ய வேண்டும், கட்சியிலிருந்து ₹1 கூட பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News March 24, 2026
BIG NEWS: ஸ்டாலினுக்கு ஷாக்.. புதிய கருத்துக்கணிப்பு

CNN News18-ன் கருத்துக்கணிப்பில், CM ஸ்டாலினை விட EPS சிறப்பான ஆட்சியை வழங்கியதாக மக்கள் கூறியுள்ளனர். இந்த தேர்தலில் திமுக+ 40.1%, அதிமுக+ 38.1%, தவெகவுக்கு 14.8% வாக்குகள் கிடைக்கும்; தொகுதிகள் அடிப்படையில் திமுக+(113-123), அதிமுக+(106-116), தவெக(2-8) வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 200 தொகுதிகளை திமுக+ வெல்லும் என நம்பியிருந்த CM ஸ்டாலினுக்கு, இந்த கருத்துக்கணிப்பு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.
News March 24, 2026
கேட்டதில் 99% தொகுதிகள் கொடுத்துள்ளார்கள்: TTV

அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய TTV தினகரன், நாங்கள் கேட்டதில் 99% தொகுதிகள் கொடுத்துள்ளார்கள் என்றும், 11 தொகுதிகளிலும் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார். அதிமுக அலுவலகத்திற்கு 1987 முதல் வருகிறேன். கடந்த 7,8 ஆண்டுகளாக தான் வரவில்லை; இங்கு ஜெயலலிதா இருப்பதை உணர்கிறேன். தேர்தலில் NDA அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
News March 24, 2026
மூத்த தலைவர் தத்தா மேகே காலமானார்

காங்கிரஸ், பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தத்தா மேகே(89) காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பில் நாக்பூரில் போட்டியிட்டு 4 முறை லோக் சபா MP ஆகியுள்ளார். மேலும், 1999-ல் தேசியவாத காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தபோது, இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தத்தாவின் மறைவுக்கு நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


