News November 13, 2025

இந்தியர்களின் சிரமத்தை போக்கிய ஒற்றை லெட்டர்!

image

ரயில் பயணத்தின் போது, கழிப்பறை இல்லாத நிலையை யோசித்து பார்க்க முடியுமா? 1909-க்கு முன், நாட்டில் ரயில்கள் அப்படிதான் இருந்துள்ளன. மக்கள் ஸ்டேஷன் கழிப்பறையையே பயன்படுத்தி உள்ளனர். அப்படி, கழிப்பறையை பயன்படுத்த சென்ற சந்திரா சென் என்பவர், ரயில் புறப்பட்டதால் வேட்டியை சரியாக கட்டாமல் ஓடிவந்து, பெரும் அவமானத்தை சந்தித்துள்ளார். அவர் அன்று ரயில்வேக்கு எழுதிய லெட்டர் தான், கழிப்பறையை கொண்டுவந்துள்ளது.

Similar News

News March 11, 2026

சஞ்சு சாம்சனை அடுத்த கேப்டனாக்க வேண்டும்: கைஃப்

image

சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினால், அந்த இடத்தை சஞ்சு சாம்சனால் நிரப்ப முடியும் என Ex வீரர் முகம்மது கைஃப் கூறியுள்ளார். 35 வயதாகும் சூர்யகுமார் நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் 31 வயதான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சன் அடுத்த இந்திய கேப்டனாக இருக்கலாம் என கைஃப் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

News March 11, 2026

நம் குடும்பத்தை பிரித்தது திமுக தான்: அன்புமணி

image

கடந்த 6 மாதமாக நடப்பதை எல்லாம் தன்னால் வெளியே சொல்ல முடியாது என அன்புமணி வேதனையுடன் தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் பேசிய அவர், நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு காரணமே கேடுகெட்ட திமுக தான் என்றார். பாமக என்ற நம் குடும்பத்திற்குள் திமுக குழப்பத்தை ஏற்படுத்தியது; வரும் தேர்தலில் உங்கள் கோபத்தை எல்லாம் இந்த தீயசக்தி திமுக மீது காண்பியுங்கள் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!