News November 13, 2025

SIR-ஐ ஒத்திவைக்க கோரிய கேரளா: ECI எதிர்ப்பு

image

SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், SIR பணிகளை ஒத்திவைக்க கோரி கேரள அரசு, மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் SIR பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வது மாநில நிர்வாகத்திற்கு அழுத்தத்தை தருவதாக அரசு வாதிட்ட நிலையில், ECI இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Similar News

News March 8, 2026

நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

image

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News March 8, 2026

பைனலில் வென்றால் எவ்வளவு பரிசு?

image

T20 WC தொடருக்காக ICC மொத்தம் ₹120 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹27.48 கோடியும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹14.65 கோடியும் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த SA, ENG அணிகளுக்கு தலா ₹7.24 கோடியும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ₹3.48 கோடியும், போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கு தலா ₹2.29 கோடியும் கிடைக்கும்.

News March 8, 2026

₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

image

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!