News November 13, 2025
நத்தம்: வெளிநாட்டில் கணவன்.. மனைவி அதிர்ச்சி முடிவு!

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டியை சேர்ந்தவர் கரந்தமலை (34). சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சிலம்பரசி (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த கரந்தமலை, கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட கவலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிலம்பரசி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
திண்டுக்கல்லில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார்

திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனை
மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை கைபேசி 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை கைபேசி 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


