News November 13, 2025

சென்னை அருகே சிறுவனை கத்தியால் தாக்கியவர் கைது

image

சாலிகிராமம் காந்தி நகரில், கணேஷ் என்பவரின் வீட்டில் வசிக்கும் பாஸ்கரன், லீசு பணம் ரூ.6 லட்சம் பெற்றும், மறுநாள் மீண்டும் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பின்னர், நேற்று கணேஷ் வெளியே சென்ற போது, அவரது மகனை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார். சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை இன்று கைது செய்தனர்.

Similar News

News March 11, 2026

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு – தனியார் கல்லூரிக்கு விடுமுறை!

image

சென்னையில் கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மதுரவாயலில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வருகிற 25 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.

News March 11, 2026

சென்னை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

image

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News March 11, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!