News November 13, 2025
ஈரோடு மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

குழந்தைகளுக்கு போன் கொடுப்பது ஆபத்தானது, ஏனெனில் இது கண் பிரச்சனைகள், தூக்கமின்மை, சமூகத்திறன் குறைவு, அறிவாற்றல் வளர்ச்சி பாதிப்பு,கதிர்வீச்சு வெளிப்பாடு, சுய சிந்தனை போன்ற பல்வேறு உடல் மனரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். போனின் அதிகப்படியான பயன்பாடு, குழந்தைகளின் மூளை மற்றும் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News November 13, 2025
வெயிலில் முதலிடம் பிடித்த ஈரோடு!

தமிழ்நாட்டில் இன்று (13-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 96.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.6 டிகிரி செல்சியஸ் வெயில் (96.08 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.
News November 13, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்
நடைபெறவுள்ளது. இதில், ஈரோடு கோட்டத்தின் கீழ் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!


