News November 13, 2025

ONGC-ல் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வரும் நவம்பர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 13, 2025

ஷமி ஏன் அணியில் இல்லை? கேப்டன் சுப்மன் கில் பதில்!

image

ஷமி ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். தற்போது அணியில் உள்ள பவுலர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருங்காலத்தில் ஷமி அணியில் இடம் பெறுவாரா என்பதற்கு அணி தேர்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.

News November 13, 2025

எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.

News November 13, 2025

தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

image

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.

error: Content is protected !!