News November 13, 2025
சென்னையில் நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி

சென்னை 5-வது கூடுதல் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற கைதி கருக்கா வினோத்தை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான <<18268747>>கருக்கா வினோத்துக்கு<<>>, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தி.நகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் ஆஜரானபோது வினோத், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
Similar News
News March 18, 2026
BREAKING: தமிழ்நாடு தேர்தலில் அதிரடி மாற்றம்

ECI வழங்கும் பூத் ஸ்லிப்பில் இந்த முறை வாக்காளரின் போட்டோ இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வரிசை எண்ணை அறிந்துக் கொள்வதற்காக புகைப்படத்துடன் பூத் சிலிப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு பதிலாக வாக்காளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு (voter Information Slip) இந்தாண்டு அச்சிட்டு வழங்கப்படுகிறது. ஆனால், இதை வாக்களிப்பதற்கான ஆவணமாக காண்பிக்க முடியாது.
News March 18, 2026
நான்கரை வயது சிறுவன் பலி.. சீறிய நயினார்

மருத்துவத் துறையை சீரழித்து மக்கள் உயிருடன் விளையாடும் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருச்சி கண்ணனூரில் டாக்டர் இல்லாததால் நான்கரை வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு என ஐந்தாண்டுகளாக வீண் பெருமை பேசும் திமுக அரசு போதிய டாக்டர்களைக்கூட நியமிக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
News March 18, 2026
FLASH: அதிமுக EX அமைச்சர்கள் 7 பேருக்கு எதிராக மனு!

அதிமுக EX அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ED விசாரிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக MP கிரிராஜன் இந்த மனுவைத் தொடர்ந்துள்ளார். SP வேலுமணி, தங்கமணி, MR விஜயபாஸ்கர், KP அன்பழகன், C விஜயபாஸ்கர், காமராஜ், KC வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) விசாரித்து வரும் நிலையில், இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


