News November 13, 2025

விருதுநகர்: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை!

image

விருதுநகர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News March 5, 2026

விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

விருதுநகர்: 126 ஆட்டு கிடா, 260 சேவல் பலியிட்டு நேர்த்தி கடன்

image

விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதான பூஜை, 36ம் ஆண்டு பூஜை நடைபெற்றது. இந்த பௌர்ணமி பூஜையில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாக 126 ஆட்டுக்கடாய், 260 சேவல் பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

News March 5, 2026

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6105 ஆகவும் பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20080 ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆக விருதுநகர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!