News November 13, 2025
தோரணமலை கோவிலில் நாளை வருண கலச பூஜை

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நாளை நவ.14 காலை வருண கலச பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலையில் மலை உச்சியில் இருந்து பக்தர்கள் கிரக குடம் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற உள்ளது.
Similar News
News March 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேதராஜ் (52). இவர் திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்.2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 3, 2026
தென்காசி: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.!

கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் கிராமத்தில், சுடுகாடு செல்லும் சாலை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இறந்த மூதாட்டியின் உடலுடன் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News March 3, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.


