News November 13, 2025
அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்டம், தத்தனுர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் நவ.18-ம் தேதி காலை 10மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளன. மேலும் விபரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 13, 2025
அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தாலுகா நடுவலூர் பாரத மாதா ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அணைத்து தரப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர், அதேபோல், அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்களும் உரிய ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
News November 13, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.


