News April 20, 2024
முறையாக வாக்குப்பதிவு நடக்கவில்லை

தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தென்சென்னை வேட்பாளர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். வாக்குச் சதவீதம் குறைந்தது கவலையளிக்கிறது எனக் கூறிய அவர், வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தேர்தலை நடத்தக்கூடாது. வாரத்தின் முதல் கடைசி நாளில் தேர்தலை நடத்தினால், மக்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.
Similar News
News August 21, 2025
தவெகவுக்கும் தலைவலியான ஆம்புலன்ஸ்

பரப்புரைக்கு நடுவே நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் டிரைவர் நோயாளியாக்கப்படுவார் என EPS பேசியது பெரும் சர்ச்சையானது. இதேபோல் தவெக மாநாட்டிலும் ஆம்புலன்ஸால் சர்ச்சை வெடித்துள்ளது. மாநாட்டுத் திடலுக்குள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் 4 தவெக தொண்டர்கள் திடலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். தடுப்புக் கம்பிகள் மேல் குதித்தும் தொண்டர்கள் உள்ளே வருகின்றனர்.
News August 21, 2025
டெல்லி CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு

தலைநகரில் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி CM ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பிரிவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 4-6 வீரர்கள் உள்பட 22 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதோடு, ஒரு புல்லட் புரூஃப் வாகனம் உள்பட 5 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாதம் ₹16 லட்சம் வரை செலவாவதாக கூறப்படுகிறது.
News August 21, 2025
ரஜினி வரலாற்றில் முதல்முறை .. வசூல் சாதனை

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ வசூல் சாதனை படைக்கிறது. குறிப்பாக, விஜய்யின் ‘GOAT’ படத்தின் வசூலை முறியடித்து, கூலி ₹500 கோடியை நெருங்கியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் உலகளவில் வசூல் மட்டும் குறையவே இல்லை. ரஜினி சினிமா வரலாற்றில் இது புதிய மைல்கல். ஓரிரு நாள்களில் ₹500 கோடி வசூலை தாண்டிவிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.