News November 13, 2025
திருவள்ளூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 11, 2026
திருவள்ளூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
ஆவடி வருகிறார் சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதி வேட்பாளர் அறிமுகம் பொதுக் கூட்டம் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிைைணப்பாளர் சா.பாத்திமா பர்ஹானா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 11, 2026
ஆவடி அருகே கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

திருவள்ளூர்: ஆவடி, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர் மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.


