News November 13, 2025
தூத்துக்குடி வந்த சட்டமன்ற இணை செயலாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற பொது கணக்கு குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆய்வுக்காக வந்திருந்த தமிழக சட்டமன்ற இணை செயலாளர் ரமேஷ் (57) என்பவர் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News March 14, 2026
தூத்துக்குடி: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர், டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் நடந்த குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
தூத்துக்குடி: நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் – EPS

விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். தூத்துக்குடி நிர்பயாவிற்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
விளாத்திகுளம்: காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த +2 மாணவி கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையை CBIக்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது. அறிவியல் பூர்வமான ஆவணங்களை சேகரித்து விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அழுத்தம் தெரிவிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.


