News November 13, 2025

₹30 கோடியுடன் IPL ஏலத்தில் களமிறங்கும் CSK

image

IPL 2026 ஏலம், CSK-வைச் சுற்றியே சுழல்கிறது. இதற்கு, சென்னை அணி, தனது தளபதியான ஜடேஜாவை விடுவித்துவிட்டு, சஞ்சுவை எடுக்க முனைப்பு காட்டுவதே காரணம். இந்நிலையில், ₹30 கோடியுடன் CSK நிர்வாகம் ஏலத்துக்கு செல்லவுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, ரச்சின், கான்வே ஆகியோரை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். பதிரானாவை அணியில் தக்க வைக்கவும் வாய்ப்புள்ளது. CSK யாரை விடுவிக்கலாம்? யாரை தக்க வைக்கலாம்?

Similar News

News March 18, 2026

CV சண்முகத்தின் பேச்சு.. கொந்தளித்த பிரேமலதா

image

<<19406314>>நடிகை நயன்தாராவை<<>> குறிப்பிட்டு பேசிய சிவி சண்முகத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்தால், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பேன் என அவர் எச்சரித்துள்ளார்.

News March 18, 2026

விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று & நாளை சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிரமமின்றி சென்னை திரும்புவதற்காக மார்ச் 22-ல் 565 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உங்கள் இருக்கையை உறுதிசெய்ய இங்கே <>கிளிக்<<>> செய்து டிக்கெட் புக் செய்யுங்கள்.

News March 18, 2026

பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு தடை எப்போது?

image

பல திரைப்பட பாடல்களின் இரட்டை அர்த்த வரிகள் புரியாமல் மாணவர்கள் ஆண்டு விழாக்களில் டான்ஸ் ஆடுவது வழக்கமாகவே உள்ளது. இதனை மேற்கோள் காட்டி, ப்ளூ சட்டை மாறன் தற்போது எழுப்பியுள்ள கேள்வி, விவாதப் பொருளாக மாறியுள்ளது. <<19416052>>விஜய் <<>>பாடல்களை மட்டும் பள்ளிகளில் தடை செய்தால் போதுமா? பள்ளி வளாகத்தினுள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!