News November 13, 2025
சென்னை: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
Similar News
News November 13, 2025
BREAKING: சென்னையில் நீதிபதி மீது காலணி வீச முயற்சி

ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி, ரவுடி கருக்கா வினோத், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்றார். தி.நகர் டாஸ்மாக் வழக்கில் ஆஜர்படுத்தியபோது இந்த சம்பவம் நடந்தது. உடனே சுதாரித்த போலீசார் அவரை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
டிகிரி போதும் சென்னையில் சூப்பர் வேலை- APPLY HERE!

சென்னையில் Mahindra Finance நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்டும். விருப்பமுள்ள ஆண்கள் <
News November 13, 2025
சென்னையில் சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


