News November 13, 2025

வேலூர்: திருமணமான 4 மாதத்தில் பலி

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(32). இவர் கே.வி.குப்பம் பி.கே.புரத்தில் தனது மனைவி அஸ்வினியைப் பார்க்க நேற்று (நவ.12 ) மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பறித்தனமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

வேலூர் ஆட்சியரின் உத்தரவு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 671 இடங்களில் 1,314 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 1,314 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 135 மேற்பார்வை அலுவலர்களும் நியமிக்க பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என கலெக்டர் இன்று (நவ.13) சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

வேலூர்: ரூ.1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 13, 2025

வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

வேலூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!