News November 13, 2025
டெல்லி கார் வெடிப்பு: DNA உறுதியானது

டெல்லி செங்கோட்டை அருகே வெடிபொருள்கள் நிரம்பிய காரை ஓட்டி வந்து, வெடிக்க செய்தது டாக்டர் உமர் நபி தான் என்பது DNA பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உமரின் உடல் பாகங்களை வைத்து, அவரது தாயாரிடம் செய்யப்பட்ட DNA பரிசோதனையில் உறுதியானது. இதனிடையே உமர் நபி, பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 அன்று பெரிய குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
₹30 கோடியுடன் IPL ஏலத்தில் களமிறங்கும் CSK

IPL 2026 ஏலம், CSK-வைச் சுற்றியே சுழல்கிறது. இதற்கு, சென்னை அணி, தனது தளபதியான ஜடேஜாவை விடுவித்துவிட்டு, சஞ்சுவை எடுக்க முனைப்பு காட்டுவதே காரணம். இந்நிலையில், ₹30 கோடியுடன் CSK நிர்வாகம் ஏலத்துக்கு செல்லவுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, ரச்சின், கான்வே ஆகியோரை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். பதிரானாவை அணியில் தக்க வைக்கவும் வாய்ப்புள்ளது. CSK யாரை விடுவிக்கலாம்? யாரை தக்க வைக்கலாம்?
News November 13, 2025
ரஜினிகாந்த் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனைக்கு பின் அது புரளி எனத் தெரியவந்தது. அண்மைக் காலமாக TN-ல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.
News November 13, 2025
திக் திக் நிமிடங்கள்… பார்த்து எவ்ளோ நாளாச்சு!

இன்று நமக்கு பிடித்த ஹாலிவுட் படங்கள், வெப் தொடர்களை OTT தளங்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களை மேலே கொடுத்துள்ளோம். போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த படத்தை கமென்ட் பண்ணுங்க.


