News November 13, 2025
14 ஆண்டுகள் சிறை: திருச்சி நீதிமன்றம் அதிரடி

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள தோப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வாய்பேச முடியாத 22 வயதுடைய மாற்றத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தஞ்சாவூரை சேர்ந்த வினோத் (40) என்பவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News November 13, 2025
திருச்சி: RKT பார்சல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாநகரில் அமைந்துள்ள RKT ஸ்பீடு பார்சல் நிறுவனத்தில் காலியாக உள்ள ACCOUNTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.13,500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News November 13, 2025
திருச்சி: மரத்தில் மோதி மூளை சாவு

சேலத்தைச் சேர்ந்த ராஜா (51). இவர் கடந்த நவ.2-ம் தேதி டூவீலரில் சோபனாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொப்பம்பட்டி அருகே வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த தடுப்பின் மீது மோதி அவர் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச் சாவு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 13, 2025
திருச்சி: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


