News November 13, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள்<> இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 13, 2025

திருப்பத்தூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)

News November 13, 2025

திருப்பத்தூர்: கள்ளக்காதலால் அரிவாள் வெட்டு

image

வாணியம்பாடி அருகே உமர் நகர் (நேதாஜி நகர்) பகுதியை சேர்ந்த அப்புன் ராஜ் என்பவரின் மனைவியுடன் பிரேம்குமார் என்பவர் கள்ளக்காதல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (நவ.12) இவ்விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பிரேம்குமார், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த அப்புன்ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். படுகாயமடைந்த அப்புன் ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News November 13, 2025

ஐயப்ப பக்தர்கள் இணைந்து ஐயப்ப சுவாமிக்கு கன்னி பூஜை

image

திருப்பத்தூர் மாவட்டம் பல்லாள பள்ளியில் எனும் அரவமற்ற பள்ளியில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இணைந்து கன்னி பூஜை நடைபெற்றது. இதில் மேல தாளங்கள் முழங்க ஐயப்ப சாமிக்கு பஜனைகள் மேற்கொண்டு 18 படிகளுக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். பூஜை நிறைவு பெற்ற பிறகு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!