News November 13, 2025
புதுகை: ஆவுடையார்கோவிலில் வண்டல் மண் கடத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே, நேற்று மணிகண்டன் (32) என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிந்து, மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் வண்டல் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
புதுகை: சேமிப்பு கணக்கு திட்டம் தொடங்க சிறப்பு முகாம்!

புதுகை மாவட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. பத்து வயதுக்குள் உட்பட்டவர்கள் தொடங்கலாம் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரு.1,50,000 வரை செலுத்தலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படும். 80.சி பிரிவின் கீழ் வரிச்சலுகை உண்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
புதுகை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
புதுக்கோட்டை: மரம் சாய்ந்து வீடு சேதம்!

புதுக்கோட்டையில் நேற்று (நவ.12) பகல் 12 மணி அளவில் மழை பெய்ய தொடங்கி, பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்த இந்த மழையின் போது பலத்த காற்றும் வீசியது. புது அரண்மனை வீதியில் ஒரு குடிசை வீட்டின் மீது வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. மேலும் நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


