News November 13, 2025
தஞ்சை: ஏர்போர்ட்டில் பணிபுரிய வாய்ப்பு – கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA – CANADA) பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
தஞ்சை: கன்று குட்டியை காப்பாற்றிய வீரர்கள்

திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது பசு மாடு நேற்று நள்ளிரவு காவிரி ஆற்றின் நடுத்திட்டில் கன்று ஈன்று உள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் கன்று குட்டியுடன் கரை திரும்ப சிரமப்பட்டதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் கன்று குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
News November 13, 2025
தஞ்சை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
வேலைவாய்ப்பு: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. மிதிவண்டிகள் கோர்க்கும் பணிக்கு 10 ஆம் வகுப்பு, ஐடிஐ படித்த ஆண்கள் மற்றும் ஏற்கனவே இப்பணி செய்தவர்கள் 15.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


