News November 13, 2025
இந்தியாவிற்கு ஒருநாள் கழித்து.. PAK-க்கு உடனே ஓடி வந்த USA

தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த ஒருநாள் கழித்து இரங்கல் தெரிவித்த அமெரிக்கா, தனது X பதிவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. ஆனால், பாகிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு நடந்த உடனே இரங்கல் தெரிவித்து பதிவிட்டு, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடன் நிற்பதாக தெரிவித்துள்ளது.
Similar News
News November 13, 2025
Cinema Roundup: ‘பைசன்’ ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

*‘ஜெயிலர் 2’ படத்தில் கன்னட நடிகை மேக்னா ராஜ் நடிப்பதாக தகவல். *அருள்நிதி நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் புரொமோ வீடியோ வெளியீடு. *விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் ‘ஜெய்பீம்’ நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடிப்பதாக தகவல். *வரும் 21-ம் தேதி ‘பைசன்’ நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. *ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் ₹14 கோடி வசூலித்துள்ளதாக தகவல்
News November 13, 2025
7 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
News November 13, 2025
குளிர்காலத்தில் உணவை சூடுபடுத்துகிறீர்களா?

சுடச்சுட உணவை சாப்பிட வேண்டும் என சிலர், குளிர்காலத்தில் மீண்டும் மீண்டும் உணவை சுட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், இது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அடிக்கடி சுட வைப்பதால் உணவில் பாக்டீரியா, பூஞ்சைகள் வளரும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் செரிமான பிரச்னைகள், வாந்தி, கல்லீரல் பாதிப்பு, சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதாக கூறுகின்றனர்.


