News November 13, 2025
ஆண்களுக்கு மாதவிடாய்.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

ஆண்களுக்கும் மாதவிடாய் இருக்க வேண்டும் என்ற தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். ஆண்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட்டால், அந்த நேரத்தில் பெண்கள் படும் வலியை, Trauma, Feelings-ஐ அவர்களால் உணர முடியும் என்று தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகள் இருப்பதாக நெட்டிசன்கள் டிரோல் செய்தனர்.
Similar News
News November 13, 2025
யாருடன் கூட்டணி? தவெக அறிவிப்பு

திமுக, பாஜகவை தவிர, தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என தவெக அறிவித்துள்ளது. இதற்கிடையே CONG கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாத இறுதியில் தவெக நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக – CONG கூட்டணி அமைந்தால், மாற்றுத்திட்டங்களுக்கு திமுக தயாராகி வருகிறதாம்.
News November 13, 2025
வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர்: எல்.முருகன்

தூய்மை பணியாளர்கள் பெயரில் பணம் பறிக்க திமுக அரசு முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலில் தூய்மை பணியாளர்களின் பணிகளை வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு திமுக அரசு தாரைவார்த்த நிலையில், தற்போது அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியையும் வழங்க டெண்டர் கோரி இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News November 13, 2025
பாலியல் வன்கொடுமை மோசடி.. பெற்றோர்களே உஷார்

பெற்றோரை குறிவைத்து புது சைபர் மோசடி தற்போது நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு மகன்கள் சென்று இருக்கும் வேளையில் பெற்றோர்களுக்கு போன் செய்து, உங்கள் மகன் தன்னுடன் படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான். அவனை கைது செய்துள்ளோம் என மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


