News November 12, 2025
தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 18, 2026
CV சண்முகத்தின் பேச்சு.. கொந்தளித்த பிரேமலதா

<<19406314>>நடிகை நயன்தாராவை<<>> குறிப்பிட்டு பேசிய சிவி சண்முகத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்தால், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பேன் என அவர் எச்சரித்துள்ளார்.
News March 18, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று & நாளை சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிரமமின்றி சென்னை திரும்புவதற்காக மார்ச் 22-ல் 565 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உங்கள் இருக்கையை உறுதிசெய்ய இங்கே <
News March 18, 2026
பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு தடை எப்போது?

பல திரைப்பட பாடல்களின் இரட்டை அர்த்த வரிகள் புரியாமல் மாணவர்கள் ஆண்டு விழாக்களில் டான்ஸ் ஆடுவது வழக்கமாகவே உள்ளது. இதனை மேற்கோள் காட்டி, ப்ளூ சட்டை மாறன் தற்போது எழுப்பியுள்ள கேள்வி, விவாதப் பொருளாக மாறியுள்ளது. <<19416052>>விஜய் <<>>பாடல்களை மட்டும் பள்ளிகளில் தடை செய்தால் போதுமா? பள்ளி வளாகத்தினுள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?


