News November 12, 2025
RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.
Similar News
News November 12, 2025
பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக

பிஹாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என NDTV-ன் கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. பாஜக 69, நிதிஷ்குமாரின் JD(U) 62, தேஜஸ்வி யாதவ்வின் RJD 63 இடங்களில் வெற்றி பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் NDA கூட்டணியின் மூத்த அண்ணனாக பாஜக உருவாக உள்ளது. கடந்த தேர்தலில் 75 தொகுதிகளில் வென்று RJD தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
டெல்லியில் முழுமையான குண்டு வெடிக்கவில்லை

டெல்லி கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருள் சிக்கியதால், தன்னிடம் உள்ள வெடிபொருளும் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில், குண்டு ஆரம்ப நிலையில் இருந்த போதே, உமர் அதை வெடிக்க வைத்துள்ளார். முழுமை பெற்ற குண்டு வெடித்திருந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
News November 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 517 ▶குறள்: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். ▶பொருள்: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


